மின்சாரத்துறையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இந்தியாவும், அமெரிக்காவும், மின்சாரத்துறையில் இருதரப்பு நலன் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம், இந்தியாவின் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அமெரிக்காவின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்.மொத்த விலை மின்சார சந்தையை ஊக்குவிப்பதற்காகவும், மின்சார தொகுப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவுமான ஒழுங்குமுறை மற்றும் கொள்கைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு,இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமில்லாமல், வளர்ச்சித் திட்டங்கள், பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…