நிதியமைச்சரின் அறிவுப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.! என்னென்ன சலுகைகள் தெரியுமா.?
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி என்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர். விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு என்றும் பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு சிறு தொழில்களுக்கான சலுகைகள் கிடைக்கும் என்றும் ரூ.250 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கும் சிறு தொழில்களுக்கும் சலுகைகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளனர். ரூ.20,000 கோடி நிவாரணம் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் பயனடைவர். சிறு, குறு தொழில்துறைக்கு வழங்கும் சலுகைகள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.