நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Default Image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவில்  நிலக்கரி சுரங்கம் & அது தொடர்பான நடைமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா துறையில் 26% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்