#Budget2023: மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று 5-ஆவது முறையாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களைவையில் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட் தற்போதைய பாஜக அரசின் கடைசி முள்ளு பட்ஜெட் ஆகும். இந்த நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதலை அடுத்து சற்று நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர். நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டின் நகல்கள் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டன.