இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது இருதரப்பு போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்குள் வன்முறை வெடித்தது. இந்த வண்முறை டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்கள் சுமார் 3 நாட்கள் நீடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பல வீடுகள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி ஜாபராபாத் – மஞ்பூர் பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்களில் சிவப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த ஒருவன் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நின்றுகொண்டிருந்த காவலர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தான். அவன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அப்பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக காவலர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பின்னர் அவன் எதிர் தரப்பு போராட்டக்காரர்களை நோக்கி சுமார் 8 முறை துப்பாக்கியால் சுட்டார். இங்கு நடந்த அந்த நிகழ்வை அங்கிருந்த செய்தியாளர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து, காவலர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அந்த கயவன் உத்தரபிரதேச மாநிலம் பரோலியில் பதுங்கி இருந்த அந்த குற்றவாளியான ஷாரூக்கை கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி டெல்லி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய ஷாரூக் தங்க இடமளித்ததாக கலீம் அகமது மற்றும் அவருக்கு உதவிய இஸ்டியாக் மாலிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக் பதான் மற்றும் அவனுக்கு உதவி செய்த கலீம் அகமது, இஸ்டியாக் மாலிக் ஆகிய மூன்று பேர் மீது டெல்லி காவல்துறையினர் நேற்று 350 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.