குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் பயனில்லாதது என அந்த மாநில ஆளுநர் தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார். மேலும் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் விமர்சித்த ஆளுநர், நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நம் நாட்டில் முன்பு மன்னர்களை விட அதிகாரம் மிக்கவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால் தற்போது அப்படி ஒன்றும் கிடையாது என்றார். மேலும் கூறிய அவர், நம் மாநில சட்டப்பேரவையை விட நம் மாநிலத்தில் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்றார் முதல்வர் பினராயி.மேலும் கூறிய அவர், இந்திய அரசியல் சாசனத்தை நம் மாநில ஆளுநர் படிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஆளுநருக்கு தேவையான விளக்கம் கிடைக்கும் காட்டமாக கூறியுள்ளார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…