குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான்,மேற்கு வங்க மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் நடக்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.அதில்,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.பின்னர் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக புறக்கணித்தனர்.பாஜக வெளிநடப்பு செய்தது .மக்கள் பிரச்சனைகளை குறித்து விவாதிக்காமல் அரசியல் நோக்கத்தோடு கூட்டப்பட்டதாக குற்றச்சாட்டினர்.ஆனால் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று தெரிவித்தார்.தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் எதிர்ப்பையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…