குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் அமல்.! அசாமில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்.!

CAA Act - Assam Protest

CAA Act : ஆளும் பாஜக அரசால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 வருடங்கள் கழித்து நேற்று நாட்டில் அமல்படுத்தப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!

ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போதே, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் உயிரிழப்புகளும் நேரும் நிலை உருவானது. இந்நிலையில், நேற்று மத்திய அரசு மீண்டும் இதனை கையிலெடுத்து இருப்பது எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் சாராத பல்வேறு அமைப்புகள் மத்தியில் எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது.

Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்

முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநில முதல்வர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நேற்று முதல்  அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் ஆரம்பித்துள்ளனர்.  அசாம் மாநிலத்தில், குவஹாத்தி , கம்ரூப், பார்பேட்டா மற்றும் திப்ருகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Read More – PM Modi : அக்னி- 5 சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவிப்பு ..!

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இன்று (செவ்வாய்கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்கள் குறித்து அசாம் காவல்துறை கூறுகையில் , போராட்டங்களின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், சேதாரத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட போராட்ட அமைப்புகளிடம் இருந்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் அசாம் காவல்துரை அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்