சி.ஏ. தேர்வு முடிவு : பட்டயக் கணக்காளர் பணிக்கான சி.ஏ. இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் நடந்த இத்தேர்வுகளை சுமார் 4.50 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதனுடன், சி.ஏ. இன்டர் மீடியேட் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை இந்திய பட்டய கணக்காளர்களின் நிறுவனம் (ICAI) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை www.icai.nic.in அல்லது icai.org என்கின்ற இணையதளங்களில் சென்று தெரிந்துக்கொள்ளலாம். இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவாக 20,446 பேர் தேர்ச்சியடைந்து பட்டயக் கணக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.
ஆம், வழக்கமாக 13,000 முதல் 15,000 பேர் வரையே இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால், இந்த முறை 75 ஆண்டுகளில் இல்லாத அளவாக 20,446 பேர் சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக, டெல்லியைச் சேர்ந்த ஷிவம் மிஸ்ரா 83.33% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் டெல்லியைச் சேர்ந்த வர்ஷா அரோரா 80% மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்திலும், மும்பையை சேர்ந்த கிரண் ராஜேந்திர சிங், கில்மான் சாலிம் ஆகியோர் 79.50% மதிப்பெண் பெற்று 3ஆம் இடத்தை பிடித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…