ராஜீவ் குமாரிடம் ஞாயிற்றுகிழமை விசாரணையை தொடங்கும் C.B.I….!!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் C.B.I உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.அதில் கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ்குமாரை சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜீவ் குமாரிடம் வருகின்ற ஞாயிற்றுகிழமை C.B.I விசாரணையை தொடங்க இருக்கின்றது.