காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால் காலமானார்.மேலும் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞரும், 6 முறை மாநிலங்களவை எம்.பி யுமான ராம்ஜெத்மலானி காலமாகி விட்டார்.
இந்த நிலையில் அருண்ஜேட்லி, ராம்ஜெத்மலானி மறைவை தொடர்ந்து 2 இடம் காலியானது மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் சட்டப்பேரவை மூலம் புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025