டெல்லியில் ஜூலை 31 க்குள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாக அதிகரிக்கும்- துணை முதல்வர்!
டெல்லியில் ஜூலை 31ம் தேதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாக அதிகரிக்கும் என அம்மாநில துணை முதல்வனர் தெரிவித்தார்.
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29,943 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 874 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி மாநிலத்தின் துணை முதல்வரான மனிஷ் சிசோடியா, டெல்லியில் ஜூலை 31ம் தேதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.