10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது…
நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதி என்று மொத்தம் 54 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.