ஈரோட்டை போல இடைத்தேர்தல் காணும் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்கள்.! கள நிலவரம் என்ன.?

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் ராம் நகர் தொகுதி, மேற்கு வங்க மாநிலத்தில் சாகர்திகி தொகுதி என 3 மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவியில் இருந்த ஈவெரா மறைந்ததை அடுத்து அந்த தொகுதியில் இன்று தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதே போல, வடகிழகிழக்கு மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திலும் தலா ஒரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கம் : இதில், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியின் மூன்று முறை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் இருந்த சுப்ரதா சாஹா கடந்த ஆண்டு டிசம்பரில் மரணமடைந்ததார்.

ஜார்கண்ட் : அதே போல, ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மம்தா தேவி கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த காரணங்களை அடுத்து மேற்கண்ட 2 மாநிலங்களும், (தமிழகத்தை சேர்த்து 3 மாநிலங்கள் )  இடைத்தேர்தல் இன்று நடத்தப்பட்டு வருகிறது.

பாஜக – காங்கிரஸ் : இதில்,  ஜார்கண்ட் மாநிலம் ராம்நகரில் 14 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 18 வேட்பாளர்கள் களத்தில் இருகின்றனர். இதில் ஆளும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. அதற்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏஜேஎஸ்யு கட்சியும் களமிறங்கி உள்ளதால் இந்த இரு கட்சிக்கு இடையேதான் முக்கிய இடையேதான் போட்டி முக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியானது மம்தா தேவியின் கணவர் பஜ்ரங் மஹ்தோவை களத்தில் நிறுத்தியுள்ளது. அதே சமயம், AJSU கட்சி அக்கட்சி முக்கிய தலைவர் சுனிதா சவுத்ரியை களமிறங்கியுள்ளது.

திரிணாமுல் – பாஜக – காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேபாஷிஷ் பானர்ஜி களமிறங்கி உள்ளார். பாஜக சார்பில் திலீப் சாஹா களமிறங்கி உள்ளார். அதே நேரத்தில் இடதுசாரி ஆதரவுவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பேரோன் பிஸ்வாஸ் களமிறங்கி உள்ளதால் இந்த இடைத்தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கிறது.

இந்த 3 மாநில இடைத்தேர்தல் மற்றும் மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநில சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி வாக்குகிப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

3 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

4 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

7 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

7 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

8 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago