இடைத்தேர்தல் முடிவுகள் : முன்னேறி வரும் I.N.D.I.A கூட்டணி.! கடும் பின்னடைவில் NDA கூட்டணி.!

Rahul Gandhi - PM Modi - Mamata banerjee

இடைத்தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13இல் 11 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர், பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. மொத்தம் இடைத்தேர்தல் நடந்த 13 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசம் அமர்வாரா தொகுதி, உத்தராகண்ட் பத்ரிநாத் தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக (I.N.D.I.A கூட்டணி) முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய இடங்களில் TMC முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. பீகாரின் ருபாலி தொகுதியில் JDU முன்னிலை வகிக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

இமாச்சலப்பிரதேசத்தின் டேரா, நலகர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரகாண்டின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் தொகுதிகளிலும், மத்தியப்பிரதேசத்தின் அவார்வாரா தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது .

பஞ்சாப் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 11வது சுற்று முடிவில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 30671 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 8வது சுற்று முடிவில் ஹிமாச்சல பிரதேசம் டேஹ்ரா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்கூர் 6115 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என தற்போது வரையில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்