நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
56 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேசம்:
உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 7 தொகுதியில் சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 6 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.
மணிப்பூர்:
மணிப்பூரில் 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றியும், 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றியும், 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
குஜராத்:
குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடாகா:
கர்நாடாகாவில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா:
தெலுங்கானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா:
ஹரியானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட்:
ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…