இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆதிக்கம் செலுத்தும் பாஜக ..!

Default Image

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

56 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்திர பிரதேசம்: 

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 7 தொகுதியில்  சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 6  இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.

மணிப்பூர்:

மணிப்பூரில் 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றியும்,  7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1  தொகுதியில் வெற்றியும்,  8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

குஜராத்:

குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

கர்நாடாகா:

கர்நாடாகாவில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானா:

தெலுங்கானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானா:

ஹரியானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும்  காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்ட்டில்  நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ்  1 தொகுதிகளிலும்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்