#2019 RECAP: கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.!
- இடைத்தேர்தலில் பாஜக ஆட்சியை தக்கவைத்து கொள்ள 8 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் பாஜக தள்ளப்பட்டது.
- நடந்து முடிந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்று எடியூரப்பா அரசு ஆட்சியை தக்கவைத்து கொண்டது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை.
இதனால் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 17 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கத்தை தடை செய்ய கோரி வழக்குகள் தொடர்ந்தன. இதனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஆட்சி கவிழ்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என அறிவித்தார்.
மேலும் காலியான இடைத்தேர்தல் நடத்தவும் , அந்த இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்த 17 எம்.எல்.ஏ.க்களும் போட்டியிட தடை இல்லை எனவும் நீதிபதிகள் கூறினார். இதை எடுத்து கடந்த 05- தேதி கர்நாடக மாநிலத்தில் 2 தொகுதி தவிர 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக பதவி 15 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் , மதசார்பற்ற ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
தற்போது ஆட்சி அமைத்து கொண்டிருக்கும் பாஜக கர்நாடக சட்டசபை சபாநாயகர் சேர்த்து மொத்தம் 225 இடங்கள் இருந்தது.அதில் பாரதிய ஜனதா கட்சி 105 எம்.எல்.ஏ.க் களும் , காங்கிரஸ் 66 எம்.எல்.ஏ.க்களும், மதசார் பற்ற ஜனதா தளம் 34 எம்.எல்.ஏக்களும் இருந்தனர்.
இதனால் இடைத்தேர்தலில் பாஜக ஆட்சியை தக்கவைத்து கொள்ள 112 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என இருந்தபோது 15 தொகுதிகளில் பாஜக கண்டிப்பாக 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் இல்லையென்றால் ஆட்சி அமைப்பதில் ஆபத்து ஏற்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்று எடியூரப்பா அரசு ஆட்சியை தக்கவைத்து கொண்டது.