நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது? என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர் .ஆலோசனையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றனர். கொரோனா காலத்தில் தேர்தல்களை நடத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி ஷரன் கூறுகையில், நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தேர்தல் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் .இடைத்தேர்தல் அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…