வங்கிகளில் கடன் வாங்கியோர் “3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டத்தேவையில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 உயிரிழந்துள்ளனர்.
நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி சில சலுகைகளை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது , அவர் ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் இஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.