பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜன் வாங்குங்கள்…! மத்திய அரசை விளாசிய டெல்லி உயர்நீதிமன்றம்…!

Default Image

ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு,  திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால் ஆக்சிஜனை கொடுங்கள். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் போராடி வருகிறது. இந்நிலையில் இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நோயின் தாக்கம் ஒருபுறமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறையினாலும் சில நோயாளிகள் உயிரிழந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாத சூழல்  ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம்  உள்ளது. உடனடியாக ஆக்சிஜனை வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை நேற்று விசாரித்த நிலையில்,  உரிய நடவடிக்கை எடுக்காத, மத்திய அரசை கண்டித்து நீதிபதிக்கு கருத்து தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை தருவது அரசின் அடிப்படை கடமை. மத்திய அரசு அதனை சரியாக செய்ய வேண்டும்.  ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு,  திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால் ஆக்சிஜனை கொடுங்கள் என டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர் வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழப்பு ஏற்பட்டால், அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியது தானே என்றும் தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசு சார்பில், தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் அவர்களுக்கு ஆனது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதி மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப் படுகிறீர்கள்.

டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக் கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது என்றும், நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை. ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும், இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
TVK Leader VIjay - DMK MP Kanimozhi
sivakarthikeyan dhanush
annamalai tamilisai mk stalin
Sam Curran
balachandran weather rain
Kanimozhi