உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு… பட்ஜெட்டில் அறிவிப்பு.
- பட்ஜெட்ட்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு குறித்த புதிய அறிவிப்பு.
- சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக..
ஒரு நாட்டின் உள்கட்டமைப்பை மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதி, கழிவு நீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகளே நிர்ணயிக்கின்றன. இந்த உள்கட்டமைப்பு வசதி என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அந்த நாட்டின் செழிப்பையும் நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது.
இவற்றில் ஒன்றான உள்கட்டமைப்பு பங்கு பத்திரம் மூலம் கிடைக்கும் மூலதனம். 2019-2025 ஆண்டுக்கான டாஸ்க் போர்ஸ் அறிக்கையை நிதியமைச்சர் சென்ற மாதம் வெளியிட்டார். இதில், 2024- 2025 GDP யாக 5 ட்ரில்லியன் டாலரை இந்தியா அடைவதற்கு 1.4 ட்ரில்லியன் டாலர் செலவழிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில், ரூபாய் 20,000-க்கு உள்கட்டமைப்பு பத்திரத்தை வாங்குவதில் முதலீடு செய்யும் தனிநபருக்கு வருமானத்திலிருந்து வரிச்சலுகை அளிக்கப்பட்டிருந்தது. பிரிவுகள் 80C, 80CC மற்றும் 80CCD பிரிவுக்கு மொத்தமாக வழங்கப்பட்ட வருமான தள்ளுபடி தொகையுடன், 80CCF பிரிவுக்குத் தனியாகத் தள்ளுபடியும் வழங்கப்பட்டது,
இந்த முதலீட்டுக்கான வருமான தள்ளுபடியைக் குறைந்தபட்சம் ஐந்து வருடத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது. மறுபடியும் இந்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு என்று தனியாகத் தள்ளுபடி வழங்காமல், 80C பிரிவின் கீழ் தள்ளுபடி வழங்க நிதியமைச்சர் மறுபரிசீலனை செய்துள்ளார். இதில், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியான உள்கட்டமைப்பை மேம்படுத்த மிகப் பெரிய முதலீடு தேவையாக உள்ளது. இப்பத்திரத் திட்டத்தைத் திரும்ப அறிமுகம் செய்வதால் நாட்டுக்குத் தேவையான முதலீடு கிடைக்கும். மேலும், தனிநபர்கள் முதலீடு செய்யும் மூலதனம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமையும். 100 லட்சம் கோடி முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத் தேவைப்படும் நிலையில், இதை இன்ஃப்ரா ஃபாண்டு அமைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.