தொழிலதிபர் யூசுப் அலி சென்ற ‘LULU’ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வயலில் தரையிறக்கப்பட்டது.விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான யூசுப் அலி, அவரது மனைவி மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற LULU ஹெலிகாப்டர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை அவசர அவசரமாக கொச்சின் பனங்காட்டில் உள்ள NH பைபாஸினருகில் சேறும்,சகதியுமாய் இருந்த இடத்தில் தரையிறக்கப்பட்டது.இதனால் ஹெலிகாப்டர் ஒரு சிறிய விபத்துக்குள்ளானது.இதனால் அதில் பயணம் செய்தவர்கள் சிறிய காயங்களுடன் முதலுதவிக்காக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகையில், லூலூ குழுமத்தின் தலைவரான திரு. யூசுப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர்,கொச்சு கடவந்திராவில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து, சிறிது தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை அழைப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.பனங்காட்டின் மீன்வளக் கல்லூரியின் மைதானத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக 200 மீ தொலைவிற்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலை அருகில் தரையிறக்கப்பட்டுள்ளது,என்று தெரிவித்தனர்.
மேலும்,விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
யூசுப் அலி சமீபத்தில் 4.8 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்ட இரண்டாவது ஐக்கிய அரபு எமிரேட் பணக்காரராக உருவெடுத்துள்ளார் என்றும், லுலு குரூப் இன்டர்நேஷனலின் 7.4 பில்லியன் டாலர் வருவாயை வளைகுடா மற்றும் பிற இடங்களில் சுமார் 200 நிறுவனங்களுடன் பங்கு வைத்திருக்கிறார் என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…