என்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..!
- குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி , எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டினர்.
- மேலும் குஜராத் மாநில தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் என்பவர் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக கூறினார்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி , எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டினர். மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ் நகர் மாவட்டத்தை சார்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் , இந்த நாட்டின் பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஐதராபாத் போலீசார் மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள். நான் ஐதராபாத்துக்கு சென்று ரூ.1 லட்சம் பரிசை வழக்க உள்ளதாக கூறினார்.