தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு : இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!

ரத்தன் டாடா மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

RIP RatanTata

மும்பை : இந்தியவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரத்தன் டாட்டா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்கள். யாரெல்லாம் இரங்கலை தெரிவித்துள்ளார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சில மனிதர்கள் வாழ்க்கை பாடப்புத்தகங்கள், அவர்கள் தலைமை, வெற்றி மற்றும் மரபு பற்றி நமக்கு கற்பிக்கின்றன. அசாதாரணமான அதே சமயம் மனிதர்கள் மற்றும் அணுகக்கூடியவர்கள், அவை நம்மை ஊக்குவித்து வழிநடத்துகின்றன. இந்தியா ஒரு உண்மையான மகனையும் சாம்பியனையும் இழந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

தனுஷ்

நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “நாம் இன்று ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளரையும் ஒரு சிறந்த மனிதரையும் இழந்துவிட்டோம். RIP ரத்தன் ஜி, நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள்” என கூறியுள்ளார்.

சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “திரு. ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் என தனது இரங்கலை” தெரிவித்துள்ளார்.

அஜய்தேவ்கான்

நடிகர் அஜய்தேவ்கான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்” தொலைநோக்கு பார்வையாளரை இழந்து உலகமே வருந்துகிறது. ரத்தன் டாடாவின் பாரம்பரியம் தலைமுறைகளுக்கு, என்றென்றும் ஊக்கமளிக்கும். இந்தியாவிற்கும் அதற்கு அப்பாலும் அவரது பங்களிப்பு அளவிட முடியாதது. நாங்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” இந்தியா இன்று ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளரை இழந்துவிட்டது. அவர் ஒருமைப்பாடு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக இருந்தார், அதன் பங்களிப்புகள் வணிகத்திற்கு அப்பாற்பட்டது, எண்ணற்ற வாழ்க்கையை பாதித்தது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார்.

நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “எங்களில் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் நீங்கள் மறைந்தது வேதனை அளிக்கிறது”  எனக்கூறியுள்ளார்.

மேலும், உடல் இன்று மாலை அரசு இறுதிச் சடங்கிற்கு முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக NCPA மைதானத்தில் வைக்கப்படவுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்