குஜராத் : பகுதியில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து தண்ட் மாவட்டத்தின் சத்புதாரா காட்டில் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பயணி ஒருவர் தனது ஜன்னலுக்கு வெளியே உள்ள காட்சியை வீடியோ எடுத்து கொண்டு இருந்த சமயத்தில் இந்த விபத்து நடந்து வீடியோவும் பதிவானது.
குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் உள்ள சத்புரா காட் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கர விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. டிரக் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துகுள்ளானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சூரத் சவுக் பஜாரில் இருந்து சபுதாராவுக்குச் சென்ற பேருந்து மீண்டும் சூரத் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த உடனேயே, சபுதாரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் மீட்பு குழுவினருடன் விரைந்து வந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பல பயணிகள் காயம் அடைந்தனர், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், சபுதராவில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள சபுதாரா-மலேகம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நாசிக் மாவட்டத்தின் எல்லையில் உள்ள சத்புரா ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மழைக் காலங்களில், இயற்கையின் கண்கவர் காட்சியைக் காண, சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு மக்கள் குவிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…