40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து..! பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..!

இமாச்சல பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஹிமாச்சல் சாலை போக்குவரத்து கழக (HRTC) பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட பல பயணிகளுக்கு காயம் அடைந்துள்ளனர்.
இன்று காலை மண்டி மாவட்டத்தின் கரோடி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு சென்றபோது, இரண்டு மரங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டதால் மேலும் கீழே விழாமல் தடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
இதன்பின், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. உள்ளூர் மக்களின் உதவியுடன் அவசர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025