உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் படுகாயம்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில், பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலிசார் தெறிவித்தனர். இந்த விபத்து சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளதாக காவல் அதிகாரி ராஜேஷ் சிங் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலிசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஜெய்ப்பூரில் இருந்து பஹ்ரைச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது தவறான திசையில் வந்த லாரி மோதியது.
மேலும், விபத்தில் காயமைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 4பேர் கவலைக்கிடமாகவும் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…