பீகாரில் 5 மாதங்களுக்கு பிறகு, பேருந்து சேவைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல துறைகளுக்கு மாநில அரசு தளர்வுகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பீகாரில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும் அம்மாநில அரசு, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தில் புதிதாய் 1,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,24,827 ஆக உள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பீகாரில் செப்டம்பர் 6- ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…