உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து தப்பிய பேருந்து..!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது.
நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது. இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார்.
இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் பேருந்தின் ஜன்னல் வழியாகவும், வாசல் வழியாகவும் குதித்து வெளியேறினர். இதன் பின்னர் ஓட்டுநர் அந்த பேருந்தை பின்புறமாக இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்து ஓட்டுனரின் இந்த செயலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025