ஜம்முவில் பேருந்து விபத்து..! பீகாரில் வசிக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்..!

JammuBusAccident

ஜம்முவில் பேருந்து விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பீகார் முதல்வர் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் .

ஜம்மு காஷ்மீர்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸில் இருந்து கத்ரா நோக்கிச் சென்ற பேருந்து, ஜஜ்ஜார் கோட்லி அருகே உள்ள பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான பேருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றுச் சென்றுள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர், பீகாரின் லக்கிசராய் மற்றும் பெகுசராய் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஜஜ்ஜார் கோட்லியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் பீகாரில் வசிக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ex-gratia
ex-gratia [Image Source : Twitter/@ANI]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்