‘கண்ணியமாக அடக்கம் செய்யுங்கள்’ – தேசிய மனித உரிமை ஆணையம்

Default Image

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகளை  மத்திய, மாநில அரசுகளுக்கு  தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டது.

இந்தியாவில் கொரோனாவின்  இரண்டாவது அலை காரணமாக  நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பல இடங்களில் மோசமான நிலையில் அடக்கம் செய்வது போன்ற செய்திகள் வந்துள்ளன.

சில இடங்களில் உயிரிழந்தவர்களை மொத்தமாக எரிப்பது,  நதிகளின் கரை ஓரமாக  வைத்து எரிப்பது மேலும் நதிகளில் உடல்களை வீசி எறிவதும் போன்ற பல்வேறு விஷயங்களை குறிப்பிட்ட தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வழங்கி உள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகளை  மத்திய, மாநில அரசுகளுக்கு  தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டது. அதில்,

  • சடலங்கள் வரிசையாக காத்திருப்பதை தடுக்க தற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும்.
  • சடலங்களை தொடாமல் மத சடங்குகளை செய்ய அனுமதிக்கலாம்.
  • இறந்தவர்களின் உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முடியாத நிலையில் மாநில ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளலாம்.
  • கொரோனாவால் இருந்தவர்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.
  • இறந்தவர்களின் கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ கூடாது.
  • சடலங்களை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் .
  • தடுப்பூசி செலுத்துவதில் மயான ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • மத நூல்களிலிருந்தும் வசனங்களை வாசிக்கவும், புனித நீரை தெளிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் அறிந்தவர்கள் உடலை தொடாமல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்