எனது உருவ பொம்மையை எரியுங்கள்,ஆனால் பொதுச் சொத்துக்களை எதுவும் செய்யாதீங்க – பிரதமர் மோடி

Default Image
  • போராட்டத்தில் போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றது. 
  • பொது சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதமடைந்ததுள்ளது.

இந்நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடைபெற்றது .இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி .எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு கொடுத்துள்ளனர்.எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

எனது உருவ பொம்மையை எரியுங்கள்,ஆனால் பொது சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம் .நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் காவலர்களுக்கு மதிப்பு கொடுங்கள். காவலர்கள் எவரின் மதத்தையும் பார்த்து உதவுபவர்கள் அல்ல; அவர்கள் அனைவருக்குமானவர்கள் என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்