கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பங்களாவிற்கு சீல்.! நடிகை ரேகா தனிமைப்படுத்தல்.!

நடிகை ரேகாவின் வீட்டில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரேகாவின் பங்களாவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் மகளும், நடிகையுமான ரேகா மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ‘சீ ஸ்ப்ரிங்ஸ்’ என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு காவலர்கள் பணியாற்றி வந்த நிலையில், ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது. அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நடிகை ரேகாவின் பங்களாவிற்கு நேற்றைய தினம் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து, அவரிடம் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது பங்களா இருக்கும் பகுதியை நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட காவலர் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025