புல்லட் ரயில் திட்டம் ! நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க வாய்ப்பு
ஏழு புதிய வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஆகியவற்றுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தொடங்க உள்ளது.
நாட்டின் 7 புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறை தேசிய நெடுஞ்சாலை ஆணையதிற்கு கடிதம் எழுதியது.மேலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான விவரங்களை வழங்கியுள்ளது.
இதனிடையே அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் கையகப்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டது மற்றும் இந்த செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்ல 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.நான்கு பேர் கொண்ட பணிக்குழு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் செலவைப் பகிர்வதற்கான வழிமுறைகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . நாட்டில் 7 அதிவேக ரயில் பாதைகளின் வரைபடத்தை இந்திய ரயில்வே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது .