அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி – வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம்!
ராமர் பிறப்பிடமாகிய அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமரின் பிறப்பிடம் ஆகிய அயோத்தியில் தற்பொழுது பிரம்மாண்டமான ராமன் கோயில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் டெல்லி – வாரணாசியை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தை தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் உருவாகி வருகிறதாம். இந்த திட்டத்தின் மூலம் நகரம் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய பகுதிகளை இணைக்கும் செயல்முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.