பல்கேரியாவில் முகமூடி அணியாததால் ரூ.13000 அபராதம்.! விதிகளை பின்பற்றுங்கள் – பிரதமர் மோடி.!

Default Image

பல்கேரியாவில் உள்ள பிரதமர் முகமூடி அணியாமல் வெளியே சென்றதால் அபராதம் விதித்ததாக மோடி தனது உரையில் மேற்கோள் காட்டி விதிகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று  பிரதமர் மோடி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாட்டின் முயற்சிகள் குறித்து உரையாற்றியிருந்தார். அந்த உரையின் போது பல்கேரியா பிரதமரான பாய்கோ போரிசோவ் முகமூடி அணியாமல் ரிலா மடாலயத்தில் சுற்று பயணம் செய்ததை அடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை கூறினார். கடந்த ஜூன் 23 அன்று பல்கேரியா பிரதமர் முகமூடி இன்றி மடத்திற்கு சென்றுள்ளார்.

இதனை பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தொலைக்காட்சி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக பார்த்த சுகாதார அமைச்சகம் போரிசோவ், அவரது உறுப்பினர்கள் மற்றும் முகமூடி அணியாத பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு 300 லெவாக்கள் அதாவது 150 யூரோக்கள், 170 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏனெனில், பல்கேரியாவில் மூடப்பட்ட பகுதிகளில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்