டெல்லி நேரு மைதானத்தில் தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!
ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் எண் 2 அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள தற்காலிக கட்டிடம் ஒன்று இன்று (சனிக்கிழமை) இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் நம்பர் 2 அருகே சில பணிகள் நடந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜவஹர்லால் நேரு மைதான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது வரை இந்த விபத்தில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது குறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை.