மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து இருந்த மக்கள் சிக்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7 பேர் உயிரிழந்ததாகவும் ,மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு மாநில அரசு விரைவாக உதவ வேண்டும். மீட்புப் பணிகளில் காங்கிரசாரும் உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…