#பட்ஜெட்2022: விலை அதிகரிக்கும் பொருட்கள்? விலை குறையும் பொருட்கள் எவையெவை?
மத்திய பட்ஜெட்டில் விலை அதிகரிக்கும் பொருட்கள் ஹெட்ஃபோன்கள் குடைகள் கவரிங் நகைகள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை என தகவல்.
நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், புதிய டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் திட்டம், 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு திட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மாதாந்திர சம்பளதாரர்கள் வரிச்சலுகை கிடைக்கும் என்று அதிகம் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே அளித்தது. மூலதன செலவினம் ரூ. 7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பெரு நிறுவனங்களுக்காக கூடுதல் வரி 12% லிருந்து 7% மாக குறைக்கப்படும் என்றும், மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5%-ஆக குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தார்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்: இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்கள், இயர்போன், குடைகள், சூரிய மின்கலன், சூரிய மின் தகடுகள், ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் மீட்டர், கவரிங் நகைகள், எக்ஸ்ரே இயந்திரம், பேட்டரியில் இயங்கும் சிறார் விளையாட்டு பொருள்களுக்கான உதிரிபாகங்கள்.
இறக்குமதி வரி அல்லது இவற்றின் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பால் மேற்கண்ட பொறிகளின் விலை உயரும் என்றும் கூறப்படுகிறது. உள்நாட்டில் சிறு தொழில் புரிவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வெளிநாட்டு குடைகள், அதற்கான உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை அதிகரிக்கும் பொருள்கள்: இறக்குமதி செய்யப்படும் பொலிவூட்டப்பட்ட மற்றும் அறுத்து வைரங்கள், உணவாக பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட சிப்பிகள், பதப்படுத்தப்பட்ட கனவாய் மீன்கள், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தனால், அசிட்டிக் அமிலம், செல்லிடப்பேசி கேமராக்களுக்கான லென்ஸ் ஆகியவற்றின் விலை குறையும் குறையும் என்றும் கூறப்படுகிறது.
மேற்கண்ட பொறிகளின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் அவற்றின் விலை குறைய இருக்கிறது. இதில் செல்லிடப்பேசி கேமரா லென்ஸ் மீதான வரி 15 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.