#BUDGET2022:”நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள்;1-12 ஆம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி” – பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

Default Image

ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் எனவும்,நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி 2022-23 முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மேலும்,

  • நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.
  • அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்;
  • கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin