டெல்லி:இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.அப்போது,பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார்.அவரைத் தொடர்ந்து,மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது மத்திய பட்ஜெட் இதுவாகும். அதன்படி,நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி வரம்பு உயர்வு,வீட்டு லோன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி விதிக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் உத்திரப்பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால்,இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…