#BUDGET2022:”இ-பாஸ்போர்ட்;குடிநீர் இணைப்பு வழங்க ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
டெல்லி:வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் வீடில்லாத 18 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தற்போது முதல் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில்,பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.48,000 கோடி நிதி வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன.அதன்படி,வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.மேலும்,
- கோதாவரி-பெண்ணாறு-காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம்,3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
- டிஜிட்டல் சிப் கொண்ட இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.