#BUDGET2022:”அடுத்த ஆண்டுக்குள் 22 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி:நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.அப்போது,பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார்.அவரைத் தொடர்ந்து,மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.அதன்படி,அவர் தனது உரையில் கூறியதாவது:
“அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.ஒமிக்ரான் அலைக்கு மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.எனினும்,எங்கள் தடுப்பூசி பிரச்சாரத்தின் வேகம் கொரோனாவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியது”என்று கூறினார்.மேலும்,
- இந்தியாவின் வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
- எல்.ஐ.சி. பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்.
- மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- வந்தே பாரத் திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
- அடுத்த நிதியாண்டிற்குள் 22 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
- நடப்பு நிதியாண்டில் 25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.
400 new generation Vande Bharat trains with better efficiency to be brought in during the next 3 years; 100 PM Gati Shakti Cargo terminals to be developed during next 3 years and implementation of innovative ways for building metro systems…: FM Nirmala Sitharaman
#Budget2022 pic.twitter.com/ANh5xJQFT1
— ANI (@ANI) February 1, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025