இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.! அடுத்தடுத்த நாடாளுமன்ற நிகழ்வுகள் என்னென்ன.?

Default Image

நாளை பட்ஜெட்2023 தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதற்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில்  இன்று தாக்கல் செய்கிறார். 

நாடு எதிர்பார்க்கும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வானது பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐந்தாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போதைய பட்ஜெட் தான் முழு பட்ஜெட் தாக்கல் நிகழ்வு ஆகும். 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறுகிய கால பட்ஜெட் ஆகவே இருக்கும். ஆதலால் இந்த முழு பட்ஜெட் மீது பலரும் பல எதிர்பார்ப்புகளை முன் வைத்து உள்ளனர்.

budget2023nirmala

பொருளாதார ஆய்வறிக்கை : வழக்கமாக பட்ஜெட் தொடங்குவதற்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். ஆதலால் பட்ஜெட் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து நாளை பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் அறிக்கை) தாக்கல் செய்கிறார்.

Nirmala Sitharaman is proud

கேள்வி நேரம் கிடையாது : இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களும் கேள்வி நேரம் எதுவும் நாடாளுமன்றத்தில் கிடையாது. நாளை பட்ஜெட்டை முழுதாக வாசித்து முடித்த பின்னர் நாளை மறுநாள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதங்கள் தொடங்கும். இதில் பிற கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தங்கள் பதில்களை அளிக்க உள்ளனர்.

nirmalaFMcentral

எதிர்பார்ப்புகள் : இந்த பட்ஜெட் கூட்டம் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வர உள்ளதால், இது தான் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இதில் சாமானியர்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் ஒதுக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக மாற்ற கோறும் கோரிக்கை மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பல்வேறு சலுகைகள் மேலும். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை நாளை நடக்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்