பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சனைகள்!

இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வக்ஃபு வாரிய மசோதா, யுஜிசி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

Budget session

டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

அந்த பட்ஜெட் மசோதாவையும் சேர்த்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் மிக முக்கிய மசோதா, வக்பு சட்ட திருத்தம் ஆகும். ஏற்கனவே உள்ள முசல்மான் வக்பு சட்டத்தை திருத்தி புதிய வக்பு சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை அரசே நிர்வகிக்கும் வண்ணம் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த சட்டத்திருத்தம் அமலாகும் போது நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்து, ரயில்வே திருத்த சட்ட மசோதா, வங்கி சட்டம் திருத்தம் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரும் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டது. 14 திருத்தங்களுடன், இந்த மசோதாவிற்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவில், வக்பு வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து தங்கள் கருத்துகளை வலியுறுத்தி, அரசியல் விவாதத்தில் பங்கேற்க தயாராக உள்ளன.

UGC விதிகளில் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிராகவும், ஆளுநர்களின் அத்துமீறல், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தேர்தல் ஆணைய புதிய விதிமுறைகள், மீனவர்கள் மீதான தாக்குதல், இந்தி திணிப்பு ஆகியவற்றை குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க கோரியுள்ளோம் எனவும் திரு.டி.ஆர்.பாலு  தெரிவித்திருக்கிறார்.

மேலும், நாளை, 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அவர் எட்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட்  எதிர்பார்ப்புகள் 

இந்த ஆண்டின் பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு வரம்புகளை உயர்த்துவது, புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்துவது போன்ற மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதைப்போல, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை, சம்பள மாற்றம் ஆகியவை இருக்கலாம். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புத் திட்டங்கள், தொழில்முனைவோருக்குப் பயிற்சி வசதிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் மற்றும் முதியோருக்கு கூடுதல் நலத்திட்டங்கள் அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்