புதுச்சேரியில் செப்.3-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு.
இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். மேலும், இன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் செப்டம்பர் 3-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தமிழிசையின் பட்ஜெட் உரைக்கு நாளை சட்டப்பேரவையில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும், சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் ஆகஸ்ட் 30 முதல் செப்.3 வரை புதுச்சேரி பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…