#Budget Live : விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Default Image

விவசாயிகளுக்கு ரூ .15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது.

மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,வேளாண் துறையை போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 16 அம்சங்கள் நிறைந்த செயல் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ .15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 20222-ம் ஆண்டுக்குள் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்திப் பொருட்கள் சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்   என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்