அன்று முதல் இன்று வரை… பட்ஜெட் குறித்த ஓர் அலசல்… பட்ஜெட் குறித்த பல தகவல்கள் உங்களுக்காக உள்ளே..

Published by
Kaliraj
  • இந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு.
  • அன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே.

இந்தியாவில் முதன்முறையாக  பட்ஜெட்  1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது  ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். இது தொடர்பான விரிவான தகவலை விரிவாக காணலாம்.

Related image

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்:

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முதலாக 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அப்போது நிதியமைச்சராக இருந்த  தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் செட்டி ஆவார்.

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர்:

இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் பட்டியளில்,  10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொராஜ் தேசாய் முதலிடத்தில் . இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில்  ப.சிதம்பரம் 9 முறையும், மூன்றாவது இடத்தில் பிரனாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ளனர். இதேபோல்,  மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா இருவரும் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

தனது பிறந்த நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்தவர்:

லீப் வருடத்தில் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்த மொராஜ் தேசாய் 1964 மற்றும் 1968 என இரண்டு முறை தனது பிறந்தநாள் அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

பட்ஜெட்டின் நேரத்தை (ம) மாதத்தை மாற்றியவர்கள் :

கடந்த  1999-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் சரியாக  மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த பாரம்பரிய முறையை யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு அதிரடியாக  மாற்றினார். பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார் இதேபோல், மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மேலும் 92 வருடங்களாகப் பின்பற்றி வந்த ரயில்வே பட்ஜெட்டையும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட அறிவிப்பை வெளியிடப்பட்டார்.

அல்வா கிண்டும் பழக்கம்:

சரியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பத்து  நாட்களுக்கு முன்பு அல்வா கிண்டும் விழா நடைபெறும். அதன் பின்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள்  அச்சிடப்படும். அல்வா கிண்டிய பிறகு ரகசியம் காக்கும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட யாரும் வீட்டிற்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்ஜெட் அறிக்கையின் அளவு:

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் 39 பத்திகளாக மட்டுமே இருந்த பட்ஜெட் அறிக்கை இருந்தது. பின்னர் அது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கை 253 பத்திகளாக இருந்தது. 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்த வருடம் பட்ஜெட் எப்படி வரப்போகும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Published by
Kaliraj

Recent Posts

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

41 minutes ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

1 hour ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

2 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

2 hours ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

3 hours ago