2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : மீனவர்களின் கோரிக்கை என்ன ?
- மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.
- மத்திய பட்ஜெட்டில் பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.
17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.இந்நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.அல்வா வழங்கிய நிலையில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்புப்பணி தொடங்கியது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.குறிப்பாக மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி ,மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப்படகுகள் கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டிலாவது அவர்களது கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…